Wednesday, December 4, 2024

தாஜ்மஹாலின் மறைந்த உண்மைகள்

மிக அழகிய கட்டட கலையை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் தாஜ்மஹால் இருக்கிறது, ஆனால் தாஜ்மஹாலில் அறியப்படாத சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம், முதலில் சூரிய ஒளியைப் பொறுத்து தாஜ்மஷால் வெவ்வேறு நிறமாக மாறும் அதிசய கட்டடம் என்பது பலரும் அறியப்படாத விஷயம்,   

தாஜ்மஹாலைக் கட்டிய பொறியாளர் உஸ்தாத் அகமது லாஹரி, பெர்ஷிய நாட்டை சேர்ந்தவர், பலரும் டெல்லி செங்கோட்டையை கட்டியவர் தாஜ்மஹாலின் தலைமை கட்டட வடிவமைப்பாளராக இருந்துள்ளார் எனவும் மற்றும் ஆவர் இந்தியர் என்று பொய்யாக நம்பப்பட்டு வருகிறது. .

தாஜ்மஹாலில் சிறு தவறு கூட நேராதவகையில் கட்டிடப் பணிகள் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது, உலகில் உள்ள சமச்சீரான கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் உலகின் 28 வகையான அதிக விலையுயர்ந்த கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,  அதிலும் தாஜ்மஹாலின் தூண்கள் சற்று சாய்வாக அமைந்திருக்கும் காரணம் புயலீலோ அல்லது நிலநடுக்கத்தினாலோ, எவ்விதமான பாதிப்பும் அடையாத வகையில் கட்டப்பட்டுள்ளது.

வெள்ளை தாஜ்மஹால் போலக் கருப்பு நிறத்தில் தாஜ்மஹால், ஒன்றை ஷாஜகான் கட்ட திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரை வீட்டுடன்  சிறையில் அடைத்து அத்திட்டத்தைத் தடுத்துவிட்டார் அவுரங்கசீப். இதுவே தாஜ்மஹாலின் அறியப்படாத உன்மைகள் ஆகும்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!