சினிமாவில் இருந்து விலகுகிறார் உதயநிதி ஸ்டாலின்

103
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் தமிழக முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அண்மை காலங்களில் அரசியல் மற்றும் சினிமா என இரு பெரும் துறைகளிலும் பங்கு வகிக்கிறார். தற்போது அருண் காமராஜா இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள Article 15 படத்தின் remakeஆன நெஞ்சுக்கு நீதி மே 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உதயநிதியின் அடுத்த படம் மகிழ் திருமேனியுடன் உறுதியாகியுள்ள நிலையில் அதற்கு பின் நடிக்க போகும் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படமே தான் நடிக்க போகும் கடைசி படம் என அண்மையில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ், Fahad Fasil மற்றும் வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். சினிமாவில் நடிப்பதால் அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.