உணவகத்தில் இருக்கையில் அமர்ந்து சைக்கிளிங் செய்துகொண்டே சாப்பிடும் வகையில் புது வகை நாற்காலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மக்டோனால்டு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் இருக்கைபோன்ற வடிவத்தில் புது வகை சைக்கிள் நிறுவப்பட்டுள்ளது.
அந்த சைக்கிள் வடிவ இருக்கையில் அமர்ந்து சைக்கிளை ஓட்டிக்கொண்டே உணவு சாப்பிடலாம், காபி, ஜுஸ், குளிர்பானம் போன்றவற்றைப் பருகலாம்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்காக இத்தகைய இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உடம்பிலுள்ள அதிகப்படியான ஆற்றலை அதாவது, கலோரிகளை எரித்துக்கொண்டே சாப்பிடுவது, பருகுவது போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால், உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
அதேசமயம், எரிக்கப்படும் கலோரி அளவைவிட உட்கொள்ளும் உணவு அல்லது பருகும் பானங்களின் மூலம் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேமிக்கப்படும் என்னும் நிலையும் உள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த சிலர், சாப்பிடும்போது உடற்பயிற்சி செய்வது தீங்கு விளைவிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இந்த உணவகம் எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. எனினும், ஒரேயொரு உணவகத்தில் மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.