உண்ணும் பொருள் என நினைத்து எறும்புடன் தயாரித்த பிஸ்கட்டை சாப்பிட்ட பெண்

280
Advertisement

ஒரு மனிதன் வாழ்வில் உணவு என்ற ஒன்றை பிஸ்கட்டில் இருந்து தான் தொடங்கிறான். பிஸ்கட் என்பது மாவால் தயாரிக்கப்படும்   உணவுப் பண்டம் ஆகும். இதை வெளிநாடுகளில் குக்கீஸ் எனவும் கூருவர். ஆரம்ப காலத்தில் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட பிஸ்கட்கள் காலப்போக்கில்  புதிய தலைமுறைக்கு ஏற்றார் போல் , விதவிதமான வகையில் தயாரிக்க படுகிறது. உதாரணமாக பழங்கள் , முந்திரி  , பாதாம் , சாக்லேட்   போன்ற சத்தான உணவு பொருல்ட்களைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் அதே நேரத்தில் சத்தாகவும் வழங்கவேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்துகிறது.

பிஸ்கட்டின் சுவையை பொறுத்து,  அதில்  விதைகள் எள் முதல் சீரகம் வரை இருக்கலாம். ஆனால் சில சமயங்களில், குக்கீ அல்லது பிஸ்கட் சாப்பிடும் முன் அதன் தரம் மற்றும் நிலையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைதான்.

பெண் ஒருவர் , சத்து பொருள் கலந்துள்ளதாக  நினைத்து எறும்புகள் உடன் தயாரிக்கப்பட்ட  பிஸ்கட்டை சாப்பிட்டு உள்ளார். இரண்டு  பிஸ்கட்டை  சாப்பிட்ட பின்பு தான் அது சத்து பொருள் அல்ல , அவை அனைத்தும் எறும்புகள் என்று.

இதை உணர்ந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதனை தன் டிக் டொக்கில் பகிர்ந்துள்ளார் அந்த பெண். இந்த பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை அறிந்த அவரை பின்தொடர்பவர்கள் இது அதிர்ச்சி அளிக்கிறதாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.