Thursday, June 12, 2025

உக்ரைன் சென்ற  போரிஸ் ஜான்சனின் பயண ரகசியத்தை அவரே வெளியிட்டார் !!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் குறையாத நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி  உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்காக க்யிவ் நகருக்கு இரகசிய ரயில் பயணத்தை மேற்கொண்டார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

கீவ் நகரில் அதிபர் செலன்ஸ்கியை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், கீவ் நகர வீதிகளை நடந்தே பார்வையிட்டதோடு மக்களுடனும் கலந்துரையாடினார்

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக போரிஸ் ஜான்சனின் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.உக்ரைன் அதிபர் உடனான சந்திப்பின் போது போரிஸ் ஜான்சன் கூறுகையில் , புட்சா மற்றும் இர்பின் நகரங்களில் புதின்  செய்திருப்பது போர்க்குற்றங்கள் எனக் குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், இதனால்  புதினுக்கும் ,அவரது அரசுக்கும் நிரந்தர அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் , சில நாட்களிலேயே உக்ரைனைக் கைப்பற்றி விடலாம் எனவும், கீவ் நகரம் சில மணி நேரங்களிலேயே வீழ்ந்துவிடும் எனவும் ரஷ்ய ராணுவம் நம்பியதாகவும், ஆனால் சிங்கத்தைப் போன்ற துணிச்சலை வெளிப்படுத்தி, அவர்களது எண்ணம் தவறு என்பதை உக்ரைன் மக்கள் ரஷ்ய ராணுவத்திற்கு உணர்த்தியுள்ளதாகவும்  குறிப்பிட்டு பேசியிருந்தார் .

இந்நிலையில் , உக்ரேனிய ரயில்வே  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது , அதில்   போலந்தில் இருந்து உக்ரைனுக்கு ரயிலின் மூலம்  எப்படி ரகசியமாக  உக்ரைன்  நாட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் நுழைந்தார் என்பதை விளக்குகிறது.

பயணத்தின் பொது ரயில்வே ஊழியர்களை நோக்கி ஜான்சன் , நீங்கள் இரும்பு மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். இது உக்ரைனின் மனப்பான்மை  பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news