பாலுடன் சேர்ந்தால் ஆபத்தாகும் உணவுகள் 

300
Advertisement

ஊட்டச்சத்து மிக்க பாலுடன் சில உணவு பொருட்களைச் சேர்த்துச் சாப்பிடுவது, ஆரோக்கிய சிக்கலுக்கு வழிவகுக்கிறது, எனவே பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஆபத்தை உண்டாகும் உணவுகளை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

பாலுடன் முள்ளங்கி சேர்த்துச் சாப்பிடுவது மற்றும் பால் அருந்திய பிறகு முள்ளங்கியை உடனடியாக உண்பது, உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும், அதிலும் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.  

பால் மற்றும் தயிர் ஆகிய இரண்டும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உணவுகள் ஆகும், ஆனால் ஒரே நேரத்தில் இவற்றைச் சாப்பிட்டால் உடனடியாக, காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

ஆயுர் வேதத்தின் படி, பால் ஒரு மலமிளக்கியாகச் செயல்படுகிறது, முலாம் பழம் டையூரிட்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இவை இரண்டுமே மலச்சிக்கல் பிரச்சனையைக் குணப்படுத்துவதால், இரண்டையும் ஒரே சமயத்தில் சாப்பிட்டால் மலச்சிக்கலை சரிப்படுத்தும் டோஸ் அதிகமாக மாரி விடுகிறது.

வாழைப்பழத்துடன் பால் சேர்த்துச் சாப்பிட்டால், ஒரு முழுமையான கடின உணவாகப் பார்க்கப்படுகிறது, அந்த வகையில் இவை இரண்டின் கலவை, செரிமானம் செயல்பாட்டைப் பாதித்து மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்டர்ஸ் பழங்களுடன் பால் சேர்த்துச் சாப்பிடுவது, செரிமான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் பாலுடன், இந்த பழங்களில் உள்ள சிட்ரஸ் அமிலம் சேரும் போது பால் உறைந்து வாயு மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.

பாலுடன் மீன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதில்லை அதிலும் கொழுப்பு நிறைந்த மீன்களை, பாலுடன் சேர்த்து சாப்டுக்கையில் உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. 

உளுத்தம் பருப்பினால் செய்யப்பட்ட உளுந்த வடை, உளுந்து சட்னி உள்ளிட்டவற்றைப் பாலுடன் சேர்ந்து சாப்பிடும் போது, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். 

இவை அனைத்துமே தொடர்ச்சியாகப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடும் போது ஏற்படுகிறது.