Thursday, December 26, 2024

இந்த மனிதர்களைக் கொசுக்கள் விடவே விடாது

மழைக்காலத்தில் அனைவரும் சந்திக்கும் ஒரே பொதுவான பிரச்சனை கொசுக்கடிதான், எனவே கொசுக்கடியால் மனித ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

கொசுக் கடித்தால் டெங்கு மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பல அபாய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது,

ஆனால் கொசுக்கள் சிலரை மட்டுமே அதிகமாகக் குறிவைத்துக் கடிக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா, கூட்டமாகப் பலர் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒருவரை மட்டும் கொசு அதிகமாகக் கடிப்பதைப் பார்த்திருப்போம்.

கொசுக்களுக்கு ஓ இரத்த வகை மிகவும் பிடிக்கும், ஆனால் மற்ற  இரத்த வகைக் கொண்டவர்களையும் கொசுக்கள் கடிக்கும், அதாவது ஓ இரத்தம் கொண்டவரை  இரு முறை கொசு கடித்தால் மற்ற இரத்தம் கொண்ட நபர்களை ஒரு முறை கடிக்கிறது.

அதுபோல கார்பன்டை ஆக்சைடை கொசுக்கள் அதிகமாக விரும்பும், எனவே அதிகப்படியான கார்பன்டை ஆக்சைடை வெளியிடுபவர்களைக் கொசு அதிகமாகக் கடிக்கும்.

உடல் வெப்பம் அதிகமாக இருப்பவர்களைக் கொசு அதிகமாகக் கடிக்கும், ஏனென்றால் அவர்களின் இரத்த அழுத்தம் அதிகமாக  இருப்பதால்  எளிதாகக் கொசுக்கள் அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிவிடும்.

இதனால் உடல் வெப்பத்தை வெளியேற்றும் செயல்களைச் செய்தால் கொசு அதிகம் கடிக்கும், அதாவது கருப்பு உடை அணிந்தால் அல்லது பீர் குடித்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும், இதுபோன்ற நேரங்களில் கொசு அதிகமாகக் கடிக்கும்.

Latest news