சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 16ம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.95,200-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,900-க்கும் விற்பனையாகிறது. குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “ஜோலதோ” என்பது ரஷ்ய மொழியில் தங்கம் என்ற அர்த்தம் பெறுவது கவனம் ஈர்க்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.
சர்வதேச பொருளாதார சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகளுடன் போக்கு காட்டி வருகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா மற்றும் இந்தியா மீது வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஆகியவையாகும்.
இதன் விளைவாக பல நாடுகள் தங்கத்தை குவித்து சேமிக்கத் தொடங்கியுள்ளன. மேலும், சில நாடுகள் ஏற்றுமதி, இறக்குமதிகளை டாலருக்கு பதிலாக தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளன.
இந்த நிலையிலேயே, ரஷ்யா “டாலருக்கு பதிலாக ஜோலதோ” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. இதனால் விரைவில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்ற கணிப்புகள் வலுவாக எழுந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் தங்கம் குறைந்தபட்சமாக ரூ.77,640க்கும், அதிகபட்சமாக ரூ.86,880க்கும் விற்பனையானது. தற்போது, தங்கத்துடன் வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.207க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
பொருளாதார நிபுணர்கள் தெரிவிப்பதாவது, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த வரிகள், டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சி ஆகியவை தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் தீபாவளி வரையிலும் தங்கம் சவரனுக்கு ரூ.90,000 முதல் ரூ.95,000 வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
