ஆன்லைனில் ஆர்டர் செய்த வெறும் 10 நிமிடங்களில் மருந்துகளை டெலிவரி செய்வதற்கான ஆன்லைன் பார்மசியை செப்டோ நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. ‘செப்டோ பார்மசி’ என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த ஆன்லைன் பார்மசி குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை, பெங்களூரு, டெல்லி NCR மற்றும் ஹைதராபாத் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் தற்போதைக்கு இந்த செப்டோ பார்மசி என்ற ஆன்லைன் பார்மசி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக Zepto நிறுவனம் அறிவித்துள்ளது.