Tuesday, February 4, 2025

ஆபாச Youtuber திவ்யாவின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆபாச Youtuber திவ்யா உள்ளிட்ட மூவரின் ஜாமின் மனு ஒத்தி வைக்கப்பட்டது.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்த புகாரில், ஆபாச Youtuber திவ்யா உட்பட நால்வர் கடந்த 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் யூ டியூபர் திவ்யா, கார்த்திக், ஆனந்த் ஆகிய மூவர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், மனு மீதான விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Latest news