கேரள மாநிலம் திருச்சூரில் முகமது ஷாஹின் ஷா என்ற யுடியூபர் தனது நண்பர்களுடன் காரில் திருச்சூரில் உள்ள கேரள வர்மா கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மது போதையில் இருந்த முகமது ஷாஹின் ஷா மாணவர்களுடன் போட்டி போட்டு காரில் செல்ல முயன்றார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த முகமது ஷாஹின் ஷா காரில் விரட்டி சென்று கல்லூரி மாணவர்களை இடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மாணவர்கள் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் திருச்சூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூடியூபர் முகமது ஷாஹின் ஷாவை கைது செய்து திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.