யூடியூப்பில் யூசர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ரூ.89 விலையில் புதிய “பிரீமியம் லைட்” (Premium Lite) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.149 விலையில் ஒரு திட்டம் இருந்து வருகிறது. இப்போது அதைவிட குறைந்த விலையில் இந்த திட்டம் வழங்கப்படுகின்றது.
இந்த புதிய லைட் திட்டத்தின் முழு விவரங்கள் பின்வருமாறு.
இந்த திட்டம் மாணவர்களுக்கான ஸ்டூடென்ட் திட்டத்துக்கு உட்பட்டது. மாதத்திற்கு ரூ.89 என்ற குறைந்த விலையில், 1 மாத இலவச முன்-சோதனை (ப்ரீ-டிரையல்) வசதி உள்ளது. பயனர்கள் அதிகம் எதிர்பார்ப்பது போல், இந்த திட்டத்தில் விளம்பரமில்லாமல் வீடியோக்களை பார்க்க முடியும்.
ஆனால், இந்த திட்டத்தில் யூடியூப் மியூசிக் (YouTube Music) விளம்பரமில்லாத வசதி கிடையாது. மேலும், வீடியோக்களை டவுன்லோட் செய்தல் மற்றும் பேக் கிரவுண்ட் பிளே செய்ய முடியாது. அதேபோல், யூடியூப் கிட்ஸிலும் (YouTube Kids) விளம்பரங்கள் வராது.
இவை தவிர, நீங்கள் திரும்ப டவுன்லோட், பேக்கிரவுண்ட் பிளே, மற்றும் முழு பிரீமியம் சேவைகள் வேண்டும் என்றால், ரூ.149 விலையில் உள்ள முழு பிரீமியம் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.