தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் இன்று நாகைப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது த.வெ.க. தொண்டர்கள் அந்த வாலிபரை அடித்து உதைத்துள்ளனர். அந்த வாலிபரிடம் இருந்த பையை சோதித்து பார்த்தபோது அதில் நகை இல்லை. அந்த வாலிபர் மற்றொரு நபரிடம் நகையை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
4 சவரன் செயின் என அந்த பெண் அழுதபடியே தெரிவித்தார். மேலும், போலீசாரிடம் கூறியபோது அவர்கள் எந்த நடடிவக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
