Friday, March 14, 2025

ஹோலி பண்டிகை : வண்ணம் பூசிக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை

ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்த இளைஞரை கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (25) என்ற இளைஞர் கிராம நூலகத்தில் படித்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஹன்ஸ்ராஜ் மீது வண்ணப்பொடி வீச முயன்றுள்ளனர். அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் அந்த இளைஞரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது.

இதில் சம்பந்தபட்டவர்களை கைது செய்யவேண்டும் என ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Latest news