அசாமில் மிக நீளமான பாலத்தில் தொங்கியவாறு புல்-அப் செய்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் மிக நீளமான பாலம் என அழைக்கப்படும் தோலா சாடியா பாலத்தில் தொங்கியவாறு இளைஞர் புல்-அப் செய்கிறார். இதனை அருகில் உள்ள நபர் வீடியோவாக பதிவு செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரீல்ஸ் மோகத்திற்காக உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த இளைஞருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.