பண்ருட்டியில், தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதனால், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் இருசக்கர வாகனங்கள் திருட்டுபோன இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், வாகன திருட்டில் ஈடுபட்டவர் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நல்லசிவம் என்பது தெரிய வந்தது. அதனையடுத்து, நல்லசிவத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.