திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் 26 வயது இளைஞர் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் நட்பாக பழகி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பெயரில் போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், பாண்டியனை கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.