Wednesday, February 5, 2025

இளமை: மு.க.ஸ்டாலின் சொன்ன 3 ரகசியம்

தன் இளமையின் ரகசியம் குறித்து மனம் திறந்து
கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஆகப் பொறுப்பேற்ற பிறகு,
மு.க.ஸ்டாலின் கொண்டாடிய முதல் பிறந்த நாளில் தனது
இளமையின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

1953 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 1 ஆம் தேதி தமிழக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தார். ஒவ்வொரு
பிறந்த நாளின்போதும் தனது பெற்றோரிடம் ஆசி
பெறுவது அவரது வழக்கம்.

அதன்படி, இந்த முறை தனது தாய் தயாளு அம்மாவை
சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர், சென்னை, ஆயிரம்விளக்குப் பகுதியில் அண்ணா
மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்
திறன் குறைபாடு உடையோர் மேல்நிலைப் பள்ளிக்குச்
சென்றார். அங்கு பயின்றுவரும் மாணவ மாணவிகளோடு
புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அவர்களிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது
இளமையைப் பற்றிப் பெருமிதத்தோடு கூறினார்.

”என் பிறந்த நாளின்போது ஆண்டுதோறும் நீங்கள் நடத்தும்
நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்களின் வாழ்த்துகளைப்
பெற்றுவருகிறேன். யார் என்னை வாழ்த்தினாலும் உங்கள்
வாழ்த்துக்கு ஈடாகாது.

இந்த ஆண்டு எனக்கு வயது 69 என்று சொன்னால் யாரும்
நம்பமாட்டார்கள். 39 வயதுதான் இருக்கும் என்பார்கள்.
அதற்குக் காரணம் உணவுப் பழக்கம், உடற்பயிற்சியை
முறையாகச் செய்துவருவதுதான்.

என்னதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும்,
உங்களை சந்திக்கிறபோது 5 வயது குறைந்துவிடுகிறது என்று
மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் தன் உடல்நலத்தைப்
பேணிக்காத்துவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்
இந்தப் பேச்சும் செயலும் அனைவரையும் ஊக்கப்படுத்திவருகிறது.

Latest news