தினமும் அரை மணி நேரம் மட்டுமே தூங்கும் இளைஞர்
காரணம் என்ன தெரியுமா?

149
Advertisement

தினமும் அரை மணி நேரம் மட்டுமே உறங்கும் இளைஞர்
அதற்குச் சொன்ன காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி. 36 வயதாகும்
இந்த இளைஞர் கடந்த 12 வருடங்களாகத் தினமும்
30 நிமிடம் மட்டுமே தூங்குகிறார்.

குறைந்த நேரமே தூங்குவதால் சுறுசுறுப்பாகவும்
ஆரோக்கியமாகவும் இருப்பதாக அவர் கூறுவதுதான்
எல்லாரையும் சிந்திக்க வைத்துள்ளது.

Advertisement

ஜப்பான் ஷார்ட் சிலீப்பர்ஸ் அஸோசியேஷன்
Japan Short-sleeper Association
என்னும் அமைப்பின் தலைவராக உள்ள இவர்,
குறைவான நேரம் தூங்குவது பற்றிப் பயிற்சியளித்து
வருவதுதான் இந்த விநோதத்தின் உச்சம்.

சரி, எதற்காகக் குறைந்த நேரம் தூங்குகிறார்
என்பதுதானே அனைவரின் கேள்வி.

இதோ அவர் சொல்வதைக் கேட்போமா…

எல்லாரையும்போல் நானும் எட்டு மணி நேரம்
தூங்கிக்கொண்டிருந்தேன். இதனால் என்னுடைய
வேலைகள் பாதித்தன. என்னுடைய வேலைகளைச்
செய்வதற்கு 16 மணி நேரம் போதாது.

அதனால், என்னுடைய தூங்கும் நேரத்தைக் குறைக்கத்
தொடங்கினேன். தூங்கும் நேரத்தைப் படிப்படியாகக்
குறைத்து, தற்போது ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்குகிறேன்.

சில நாட்களில் அதற்கும் குறைவான நேரமே தூங்குகிறேன். இதனால்
உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ எந்தப் பாதிப்பம் ஏற்படவில்லை என்கிறார்..

இந்த இளைஞர் தினமும் எப்படி 30 நிமிடம் மட்டுமே உறங்குகிறார்
என்பதை ஜப்பானியத் தொலைக்காட்சி ஒன்று கண்காணித்தது.
அப்போது அவர் காலையில் 8 மணிக்கு எழுந்திரித்து
ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்தார்.

பின்னர், படித்தல், எழுதுதல் பணிகளையும் சமூகப் பணிகளையும்
மேற்கொண்டார். அன்றைய தினம் இரவு 2 மணிக்கு உறங்கச்
சென்றார். 2 மணி 26 நிமிடங்களில் அலாரம் எதுவுமின்றி உறக்கத்திலிருந்து விழித்துவிட்டார்.

மருத்துவர்கள் அறிவுரைப்படி ஒருவர் சராசரியாகத்
தினமும் 6 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரம் வரை
உறங்கினால்தான் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால், இந்த இளைஞரின் செயல் வியக்க வைத்துள்ளது.