சென்ற 2021 ஆம் ஆண்டு ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஓர் இளைஞர்.
இந்தோனேஷியா நாட்டின் மேகாலாங் பகுதியில் வசித்துவருபவர் கொய்ருல் அனம். இவர் துணிகளில் வண்ணவண்ண ஓவியங்களைக் கையால் பதிப்பிக்கும் பத்திக் என்னும் வேலையைச் செய்துவருகிறார்.
இந்த இளைஞர் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரைத் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களைத் தன் ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொய்ருல் அனத்தில் செயல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20 ஆம் தேதி ரைஸ் குக்கரைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து திருமணத்துக்கு கொய்ருல் தயாரானார். திருமணத்தன்று அந்த நாட்டின் சம்பிரதாயப்படி வெள்ளை நிற ஷெர்வானி உடைகளை அணிந்திருந்தார். மணப்பெண்ணான ரைஸ் குக்கரையும் மணப்பெண்ணுக்கான வெண்ணிற உடையணிந்து அழகுபடுத்தினார்.
திருமணம் நடந்ததும், தனது புது மனைவிக்கு முத்தமிட்டார். பின்னர், இந்தத் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிப்பதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ரைஸ் குக்கரைத் திருமணம் செய்துகொண்டது பற்றிக் குறிப்பிட்டுள்ள கொய்ருல் அனம்,” இது அதிகம் பேசாது. சமையலில் சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இந்த இளைஞருக்கு அதிகம் பேசாத, சிறப்பாக சமைக்கும் பெண் கிடைக்கவில்லையோ..?
இன்னொரு விஷயம் என்ன தெரியுமா…திருமணமான நான்கே நாட்களில் தனது மனைவியை விவாகரத்தும் செய்துவிட்டாராம் இந்த வேடிக்கை மனிதர்…
இந்தக் கல்யாணம் பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்ப் பெண் ஒருத்தி, ”கல்யாணம்னா உங்களுக்கு விளையாட்டாப் போச்சுன்ன…”என்று ஆவேசப்படுகிறார்.