இறால்மூலம் பற்களை சுத்தம் செய்த இளைஞர்

319
Advertisement

நீருக்கடியில் இறால்மூலம் தனது பற்களை சுத்தம்செய்த
இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலங்குச்சி, வேப்பங்குச்சி போன்றவற்றால் பல் துலக்கிய
வழக்கம் 90s கிட்ஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம்,
அடுப்புக்கரி, செங்கல் தூள் போன்றவற்றைக்கொண்டு பல்
துலக்கிய காலமும் இன்றைய இளந்தலைமுறைக்கு வேடிக்கை
யாகத்தான் தோன்றும்.

விதம்விதமான புருசு கொண்டு பல்துலக்கி வரும் இன்றைய
தலைமுறைக்கு இவையெல்லாம் கற்கால வழக்கமாகத்தான்
கருதத் தோன்றும்.

ஆனால், இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டது இளைஞர்
ஒருவரின் விநோதச் செயல்.

இறால் மீன் மூலம் தனது பற்களை சுத்தம்செய்துள்ளார் ஓர்
இளைஞர்.

இதுதொடர்பான வீடியோ ட்டுவிட்டரில் பதிவிடப்பபட்டுள்ளது.

அந்த வீடியோவில் பவளப் பாறைக்கு அருகில் நீந்திக்
கொண்டிருக்கும் இறால் மீன் அருகே செல்ல, அந்த மீனோ
அவரது வாய்க்குள் புகுந்து பற்களை சுத்தம்செய்கிறது.

இளைஞரின் விநோதமான இந்தச் செயல் அனைவரையும்
கவர்ந்துவருகிறது.