தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் – கன்னியாகுமரி சாலையில் கல்லாமொழியில் தனியார் பெட்ரோல் பங்கு ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை காரில் வந்த இளம் ஜோடியினர் தனது காருக்கு 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப ஊழியரிடம் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கேட்டபோது, காரில் இருந்த நபர் செல்போன் மூலமாக பணம் போடுவதாக கூறி ஸ்கேன் செய்ய சொல்கிறார். பணியாளர் ஸ்கேன் செய்து கொடுத்த பின்னர், திடீரென ஊழியரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து காரை ஓட்டி தப்பிச் சென்றனர்.
உடனே அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப் பகலில் காரில் வந்த இளம் ஜோடிகள் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி பரபரப்புக்குள்ளாகியது.
