தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் வெகுளியான தனது நடிப்பை வெளிக்காட்டி பிரபலமானவர், நாஞ்சில் விஜயன். இவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும், சில திரைப்படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் குழந்தை பிறந்து சந்தோசமாக இருந்த நிலையில், நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் பாலியல் புகார் அளித்தார், கடந்த, 7 வருடங்களாக நாஞ்சில் விஜயனும் தானும் காதலித்து வந்ததாக கூறிய திருநங்கை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நாஞ்சில் தன்னுடன் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்து, தன்னை ஏமாற்றியதாக சர்ச்சையை கிளப்பினார்.
திருநங்கையின் இந்த குற்றச்சாட்டுக்கு இரண்டு நாட்களாக மௌனமாக நாஞ்சில், தற்போது இதற்கான விளக்கம் அளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். திருநங்கையை சகோதரியாக பார்த்தே பழகினேன் என்று நாஞ்சில் விஜயன் தெரிவித்து இருக்கிறார்.
இதனோடு, திருநங்கையுடன் லிவிங்கில் வாழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் உண்மையல்ல என கூறிய நாஞ்சில் விஜயன், திருமணத்திற்கு பின் அடிக்கடி இரவில் கால் செய்து, செல்போனில் மெசேஜ் அனுப்பி திருநங்கை தன்னை டார்ச்சர் செய்ததாக நாஞ்சில் திடுக்கிடும் குற்றத்தை முன் வைத்தார்.
மேலும், வட்டிக்கு காசு கொடுக்கும் திருநங்கை எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தனக்கு மூன்று லட்சம் கொடுத்ததாக கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நான் திருநங்கையை காதலித்தேன் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய நாஞ்சில் இது வெறும் பப்ளிசிட்டிக்காக பண்ணக்கூடிய ஃபைட் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
திருநங்கையின் குற்றச்சாட்டை அமைதியாக கடந்து விடலாம் என நினைத்ததாகவும் ஆனால் சமூகவலைத்தளங்களில் அழுத்தத்தால் தற்போது விளக்கம் அளித்திருப்பதாகக் கூறிய நாஞ்சில், மேலும், காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனக் கூறியுள்ளார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து பெரும் சர்ச்சைகளை கிளப்பிய திருநங்கையின் மீது நடிகர் நாஞ்சில் விஜயன் வைத்துள்ள குற்றச்சாட்டு மிக பெரிய குற்றச்சாட்டாக மாறியுள்ளது. உண்மையில் நாஞ்சில் திருநங்கையை ஏமாற்றினாரா? இல்லை திருநங்கை பப்ளிசிட்டிக்காக நாஞ்சில் மீது பழி சுமத்துகிறாரா? என்பது போலீசாரின் விசாரணையின் மட்டுமே தெரியவரும்.