மோட்டோரோலா, அதன் புதிய மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மோட்டோ G சீரிஸின் ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்ட்ரீம் சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
இதில் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. இந்த போனில் 6.88 இன்ச் HD+ திரையும், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. இந்த புதிய மொபைல் 3 வண்ணங்களில் கிடைக்கும்.
இந்த புதிய மோட்டோ ஜி06 பவர் ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல், 4GB RAM மற்றும் 64GB சேமிப்புடன் ₹7,499 விலையில் கிடைக்கும். அக்டோபர் 11, 2025 முதல் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது.
7,000mAh பேட்டரியுடன், 8W சார்ஜிங் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி ஒரு முறையாக முழுவதும் சார்ஜ் செய்தால் 65 மணி நேரம் வரை தொடர்ச்சியான பயன்பாட்டை வழங்குகிறது.