சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எப்போதுமே ‘ஆஹா ஓஹோ’, என்று சொல்லக்கூடிய மேட்ச் வின்னர்களோ, பினிஷர்களோ இருந்ததில்லை. ஏலத்திலும் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களையே தேர்வு செய்வர். இதனால் ரசிகர்கள் ‘அங்கிள்ஸ் அணி’ என்று செல்லமாக, CSKவை அழைப்பதுண்டு.
ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது. நடப்பு தொடரில் 20, 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட, சின்னப் பையன்கள் அனைவரையும் மிரள வைக்கின்றனர். அறிமுக தொடர் என்ற பயமெல்லாம் அவர்களிடம் இல்லை. தாங்கள் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்குகின்றனர்.
இதனால் சென்னை அணியும் இளம்வீரர்களின் பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளது. ஏலத்தில் 3 கோடியே 80 லட்சத்துக்கு எடுக்கப்பட்டு, பெஞ்சில் அமர்ந்திருக்கும் அன்ஷூல் கம்போஜை, டெல்லிக்கு எதிராக இறக்கப் போகிறதாம்.
தொடர் தோல்விகளால் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று, முன்பே நாம் கணித்திருந்தோம். அது உண்மையாகப் போகிறது. பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் வல்லவரான அன்ஷூலுக்கு, தோனி கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.
இதுகுறித்து CSK மீட்டிங்கில், ” ஹர்திக் பாண்டியாவிற்கு இருக்கும் திறமை அன்ஷூலுக்கும் இருக்கிறது. எனவே அவரை படிப்படியாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அன்ஷூல் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்,” என ஓபனாக பேசினாராம்.
இதனால் சென்னை அணியில் அன்ஷூல் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. இதேபோல 17 வயதான மும்பை வீரர் ஆயுஷ் மத்ரேவையும், சென்னை Trailsக்காக அழைத்திருக்கிறது. எனவே CSK, டெல்லிக்கு எதிரான மேட்சில் தரமான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.