பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதனை சிறப்பிக்கும் வகையில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்தபடும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
மாநிலத் தலைநகரம் சென்னையில் மே 14-ஆம் தேதியும் இதர முக்கிய நகரங்களில் மே 15ஆம் தேதியும் மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16 மற்றும் 17-ஆம் தேதியும் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது.
இதையடுத்து சட்டசபைத் தொகுதிகள் தாலுகாவின் ஊர்கள் பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி யாத்திரைகள் நடத்த முடிவு செய்யபட்டுள்ளது.