முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தி வெடிக்காத குண்டுகள் இன்றும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.ஆய்வின்படி , 1915 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு , ஐக்கிய இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் பெரிய அளவிலான கையெறிகுண்டு ஆகும்.
இந்நிலையில், வடக்கு அயர்லாந்து கடற்கரையில் முதலாம் உலகப் போரில் ‘வெடிக்கும் திறன் கொண்ட’ கையெறிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து கவுண்டி டவுனில் உள்ள கல்ட்ரா கடற்கரையில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த பொது,கடற்கரை ஓரம் மண்ணுக்கடியில் ஏதோ ஒரு பொருள் புதைந்திருப்பத்தை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளான்.
சிறுவன் கொடுத்த தகவலின்படி அந்த பொருள் கையெறிகுண்டு என்பதை கணித்த காவல்துறை,ராணுவ தொழில்நுட்ப அதிகாரிகளுடன் அந்த இடத்திற்கு வந்தனர்,பின் அங்கு புதைந்திருந்த வெடிகுண்டை சோதனை செய்ததில் அது “வெடிக்கும் திறன் கொண்ட- மில்ஸ் கையெறி குண்டு” என்பதை உறுதிசெய்தனர்.
அதையடுத்து ,அந்த கையெறிகுண்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு வெடிக்கவைக்கப்பட்டது.இதனை அந்நாட்டு காவல்துறை தன் முகநூலில் பகிர்ந்துள்ளது.அத்துடன், வெடிக்கும் திறன்கொண்ட முதல் உலகப்போரில் பயன்படுத்திய இந்த குண்டை கண்டுபிடித்து சரியான நேரத்தில் காவல்துறைக்கு தகவல் கொடுத்த சிறுவனுக்கு நன்றி என பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில்,முதலாம் உலக போரின் கையெறிகுண்டு ஒன்று இங்கிலாந்தின் கல்வர் கிளிஃப் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து லண்டன் டவுன்டவுனில் மற்றொரு சந்தேகத்திற்குரிய இரண்டாம் உலக போரின் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது, அதே நேரத்தில் 7 அடி ஜெர்மன் வெடிகுண்டு 2019 ஆம் ஆண்டில் ஐல் ஆஃப் வைட் கடற்கரையில் மீன்பிடி வலையில் சிக்கியதாகவும் அதை வெளியே எடுத்த நேரத்தில் அந்த குண்டு வெடித்திவிட்டதாக சொல்லப்படுகிறது.