பிரம்மாண்டமாக தொடங்கிய மகளிர் IPL  ஏலம்! WPL-லில் சொல்லி அடிக்க போகும் பெண்கள்

366
Advertisement

கிரிக்கெட் என்றாலே ஆண்களுக்கான விளையாட்டு என்ற போக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியதில் பல வீராங்கனைகளின் வியர்வையும் விடாமுயற்சியும் உள்ளது.

விளையாட்டில் அங்கீகாரம் கிடைக்க தொடங்கினாலும், மகளிர் அணி பிரீமியர் லீக் IPL தொடரை நடத்த, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வருடம் தான் முடிவு செய்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் கலந்து கொள்ளப்போகும் இந்த IPL தொடரின் போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 26 வரை நடைபெற உள்ளன.

வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் தொடங்கி உள்ளது.

1,525 வீராங்கனைகள் பதிவு செய்த நிலையில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டவர்கள் என 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் 12 கோடி வரை செலவு செய்யவும் 6 வெளிநாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யவும் அனுமதி உள்ளது. நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஆஸ்லி கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, மெக் லேன்னிங், அலிஸா ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.