மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்து பாட்டிலில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த பெண் கொடுத்த புகாரின் பெயரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் இருந்த 306 மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
கோல்ட்ரிப் இருமல் மருந்தால் உயிரிழப்பு ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
