உலகமே எதிர்பாராத வகையில் ஒரு முக்கிய வார்த்தை மோதல்…
அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது…
உக்ரைன் போர் விவகாரம் தீவிரமாவதை தொடர்ந்து, மூன்றாவது உலகப் போர் போன்ற வார்த்தைகள் அடிபட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,
“ரஷ்ய அதிபர் புதின் நெருப்புடன் விளையாடுகிறார்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா தவிர்க்கிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதற்கு பதிலடியாக, ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மற்றும் புதினின் நெருக்கமான நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளார்.
அவர் டிரம்பை எச்சரிக்கும் வகையில், “புதின் நெருப்புடன் விளையாடுவதாகவும் ரஷ்யாவில் மிகவும் மோசமான விஷயங்கள் நடப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு மோசமான விஷயம் என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்து மட்டுமே. டிரம்ப் இதைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த டிமிட்ரி மெட்வெடேவ்?
2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் 3வது அதிபர்.
புதினின் நெருங்கிய கூட்டாளி.
அந்த காலத்தில், ரஷ்யாவில் ஒரே நபர் தொடர்ந்து 2 முறை அதிபராக இருக்க முடியாததால், புதின் அவரை அதிபராக வைத்து, தானே பிரதமராக இருந்தார்.
2022-இல் துவங்கிய உக்ரைன்-ரஷ்யா போர், இன்னும் முடிவுக்கு வரவில்லை.
உலக நாடுகள் முயற்சி செய்தாலும், அமைதி எட்ட முடியவில்லை.
டிரம்ப், இந்த போரைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், புதின் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுப்பதால், விரக்தியில், டிரம்ப் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தெரிகிறது.
ஆனால், அதற்குப் பதிலாக ரஷ்யா, “உலகப் போர் 3” என வார்த்தை குண்டை வெடிக்கச் செய்திருக்கிறது.