1839 ஆக.19ல்தான் உலகில் முதன் முதலாக புகைப்படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 185 வயசாகுதுன்னு சொல்லலாம்.
புகைப்படம் என்பது ஒரு “படம்’ அல்ல. அது ஒரு “கலை’. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம் என்பது பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. எல்லா இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்சனைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம்.
ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் “டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார்.
1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ல் பிரான்ஸ் அரசு “டாகுரியோடைப்’ செயல்பாடுகளை “ப்ரீ டூ தி வேர்ல்டு’ என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில்தான் ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.