Friday, January 17, 2025

சாக்லேட் தொட்டியில் விழுந்த ஊழியர்கள்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமைந்துள்ள  “மார்ஸ்  சாக்லேட் தொழிற்சாலை”யில் ஊழியர்கள் இருவர் அங்கிருந்த  சாக்லேட் தொட்டியில் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையடுத்து,தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சாக்லேட் தொட்டியில் விழுந்தவர்களை பத்திரமாக மீட்டதாக  தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்டுள்ளது.

மருத்துவமனையில் அனுபாதிக்கப்ட்டுள்ள இரு ஊழியர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்னிக்கர்ஸ் உள்பட பலவித சுவைகளில் இந்நிறுவனம்   சாக்லேட்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் ,இந்த சம்பவம் எந்த பிராண்ட்  சாக்லேட் தொட்டியில் நிகழ்ந்தது என்ற முழு விவரத்தை வெளியிட அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

Latest news