உ.பி.ஐ.பி.எஸ் அதிகாரி அலங்கிரிதா சிங், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வராததால், ஒழுங்கீனக் குற்றச்சாட்டின் பேரில், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது அம்மாநில அரசு.
தகவலின்படி , ஐபிஎஸ் அதிகாரி அலங்கிரிதா சிங், அக்டோபர் 2021 முதல் பணிக்கு வரவில்லை.இதையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில் மாநில உள்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி அலங்கிரிதா சிங், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக அவர் SP (பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) ஆக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, அக்டோபர் 19, 2021 அன்று,அவரின் உயர் அதிகாரியை வாட்ஸ்அப் அழைப்பில் தான் லண்டனில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து அலங்கிரிதா இந்தியாவில் இல்லை என தெரிகிறது.
அவர் தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பதும், அரசு அனுமதி பெறாமல் லண்டனில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டதையடுத்து,அகில இந்திய சேவை சட்டம் 1969ன் கீழ் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற,வேலையில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது உ.பி அரசு துறைசார்ந்த நடவடிகைகள்களை மேற்கொண்டுவருகிறது.