Sunday, July 27, 2025

திருப்பூரில் கத்தியை காட்டி பெண் பாலியல் பலாத்காரம் : பீகாரை சேர்ந்த 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான பெண் ஒருவர் தனது கணவரோடு கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். வேலை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக திருப்பூர் ரயில் நிலையம் சென்றுள்ளார்.

அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் அப்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனைநம்பி அப்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர்களோடு சென்றுள்ளார்.

இதையடுத்து அந்த 3 பேரும் அப்பெண்ணின் கணவரைக் கட்டிப்போட்டு விட்டு, கணவன் மற்றும் குழந்தையின் கண் முன்னே கத்தியைக் காட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News