Tuesday, December 16, 2025

அதிர்ஷ்ட எண்ணை கொடுத்த சாட்ஜிபிடி., பரிசு மழையில் நனைந்த பெண்

லாட்டரியில் பலர் தங்களுக்குப் பிடித்த எண்களை தேர்வு செய்து பரிசு வெல்ல காத்திருப்பார்கள். அமெரிக்காவில் ஒரு பெண், சாட்ஜிபிடியிடம் ஐடியா கேட்டும், அது பரிந்துரைத்த எண்ணை வாங்கி அதனால் இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் பரிசு வென்றுள்ளார். சாட்ஜிபிடி இப்படியெல்லாம் உதவுகிறதா என்பதில் பலருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

லாட்டரி ஒரு சூதாட்டம் என்றாலும், உலகம் முழுவதும் அதற்கு பெரிய ஈர்ப்பு உள்ளது. பல லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டும் மெகா பரிசு வெல்ல வாய்ப்பு இருப்பதால், நாமாகவும் வெல்லலாம் என்ற நம்பிக்கையில் பலரும் மீண்டும் மீண்டும் லாட்டரி வாங்கி ஏமாற்றம் அடைந்தும் விடாமல் விளையாடுகிறார்கள்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் டாமி கார்வே (வயது 45). இவர் லாட்டரி விளையாடும் பழக்கம் உடையவர். கடந்த செப்டம்பர் மாதம், 1.787 பில்லியன் டாலர் மதிப்பிலுள்ள பவர்பால் ஜாக்பாட்டை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

நம்பர்களை அமைக்க சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட போது, சாட்ஜிபிடி நான்கு எண்களை பரிந்துரைத்தது. வழக்கம் போல் லாட்டரி வெல்ல வாய்ப்பில்லை என்று எண்ணிய அவருக்கு $100,000 பரிசு கிடைத்தது. தொடர்ந்து விளையாடிய போது பரிசு இருமடங்காக வளர்ந்தது. இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் அளவில் பரிசு வென்றுள்ளார்.

Related News

Latest News