சீனாவில் சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர். சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் மெத்தையில் திரும்பி படுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் முறிந்ததாக தெரிவித்தனர்.
சூரிய ஒளியை நீண்ட காலமாகத் தவிர்ப்பது எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.