Friday, August 15, 2025
HTML tutorial

ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண் காலில் விழுந்து மன்னிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பெல்லந்தூர் பகுதியில் பாங்குரி மிஸ்ரா என்ற பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ அவர் மீது லேசாக உரசியுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை இந்தியில் திட்டி தனது காலணியால் சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த அப்பெண்ணும் அவரதும் கணவரும் ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News