இலங்கையில் கடந்த 1ம் தேதி பெண் ஒருவர் நகை வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்றுள்ளார். பெண்ணின் இடது கை அவரது கைப்பைக்குள் இருப்பதைக் கண்டு உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார்.
திடீரென அப்பெண் கடைக்காரரின் முகத்தில் ஸ்ப்ரே அடிக்க முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை கட்டுப்படுத்தி, அவரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.