உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தொடர் மின்வெட்டு மின் துறை ஊழியர்கள் முறையான பதில் கொடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் ஜெயந்தி குஷ்வாஹா என்ற பெண் வசித்து வருகிறார். அந்த பெண் அங்குள்ள ஏடிஎம் மையத்தில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அப்பெண், இரவு, பகல் என எப்போதும் எங்களுக்கு மின்சாரம் இல்லை. எனவே, நான், என் முழு குடும்பத்துடன், வெப்பத்திலிருந்து சிறிது ஓய்வு பெற இங்கே ஓய்வெடுக்கிறேன் என கூறியுள்ளார்.
மின்வெட்டால் அவதியுற்று குழந்தைகளுக்காக ஏடிஎம் மையத்தில் பெண் தங்கியிருப்பது, சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.