Monday, January 19, 2026

மச்சத்தை கூட விட்டுவைக்கல.., Gemini AI-யால் அதிர்ச்சியில் உறைந்த பெண்..!

ஜெமினி ஏஐ தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில், அதில் புகைப்படத்தை பதிவிட்ட ஒருவர் அதிர்ச்சி அடைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பவானி என்ற பெண் அவரது ஜெமினி ஏஐ அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, பலரையும் யோசிக்க வைத்துள்ளார். ஏஐ எந்த அளவிற்கு ஆபத்து என்பதை இணையவாசிகளுக்கு புரியவைத்துள்ளார். பச்சை நிற சல்வாரில், கூகுள் ஜெமினியில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த நிலையில், ஜெமினி ஏஐ அதனை ரெட்ரோ ஸ்டைல் மாடலில் மாற்றி கொடுத்துள்ளது.

அதில் அவருக்கு இடது கையில் மச்சம் இருந்தது தெரிந்துள்ளது. அவருக்கு நிஜமாகவே இடது கையில் மச்சம் இருக்கும் நிலையில், ஏஐ-ல் அது வந்தளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பதிவிட்ட போட்டோ முழு கை உடைய ஆடையை அணிந்திருந்த நிலையில், எப்படி மச்சம் தெரிந்தது என பவானி வீடியோ மூலம் கேட்டிருக்கிறார்.

பெண்ணின் திகிலூட்டும் இந்த ஜெமினி ஏஐ அனுபவம், இணையவாசிகளை உஷார்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஜெமினி ஏஐ-ல் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம், தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News