அரியானா மாநிலத்தில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
46 வயதான அப்பெண் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். குருகிராமில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது மூழ்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த அந்த பெண்ணுக்கு மருத்துவமனை ஆண் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.