கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39) என்பவர் ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் ஏற்கனவே வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கு ‘Cash on Delivery’ மூலம் தினமும் 100க்கும் மேற்பட்ட பார்சல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.
மேலும் அவர் டெலிவரி விலாசத்தில் அந்த பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தைகளை சேர்த்தும் ஆர்டர் செய்து தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் கோவை சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தனியார் டிஜிட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான சதீஷ்குமாரை கைது செய்தனர்.
