தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த பெண்ணை கை கால்களை கட்டி, குடும்ப உறுப்பினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கீசரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நர்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், திடீரென பிரவீன் வீட்டிற்குள் புகுந்த பெண் வீட்டார், ஸ்வேதாவின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி, துணியால் கை கால்களை கட்டி காரில் கடத்திச் சென்றனர். தடுக்க முயன்ற பிரவீனை கண்மூடித்தனமாக தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்வேதாவின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.