கோவை அம்மன் குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கு ஹோட்டல் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருடைய 5 வயது மகள், விளையாடி கொண்டிருந்த போது, சவுமியா என்பவர் தனது வளர்ப்பு நாயை ஏவி சிறுமியை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து பொன்வேல், அளித்த புகாரின் அடிப்படையில், சவுமியா நாயை ஏவி சிறுமியை கடிக்கவைத்தது உறுதி செய்யப்படது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.