Wednesday, May 21, 2025

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை திருமணம் செய்து மோசடி செய்த பெண் கைது

நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த மடோனா என்பவர், 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்துவிட்டு பின்னர் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினார்.

இதேபோல் 2017 ஆம் ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கனகராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மடோனா, அவரிடம் பலலட்ச ரூபாய் பணம் மற்றும் 22 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு விவாகரத்து செய்தார். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே வட்டார சுகாதார ஆய்வாளரான வனத்தையன் என்பவரையும் மடோனா திருமணம் செய்துவிட்டு அவரது சொத்துக்களை அபகரிக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து வனத்தையன் என்பரின் மகள் சிசிலியா, சென்னை தாம்பரம் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் மடோனாவை சென்னை ஆவடியில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Latest news