உயிரோட இருக்கும் போதே இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்த பெண்ணின் செயல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான ஸோ பெர்னார்டு என்ற பெண் மத்திய லண்டனின் கெங்சிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் .
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கில்பர்ன் என்னும் நகர் அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் பெர்னார்டு தனது வண்டியை வேகமாக கட்டுப்பாடின்றி ஓட்டி வந்ததையடுத்து காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது தான் அவரது வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால், ஸோ பெர்னாடு கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். ஆனால், அவர் செய்த பிளானோ தாறுமாறாக இருந்தது.
வண்டி தன்னுடையது இல்லை என்றும் அது தனது தங்கையின் வண்டி என்றும் கூறினார்.
சானைஸ் பெர்னார்டு என்ற பெயரில், நீதிமன்றத்தில் ஆஜரான அந்தப் பெண், தனது சகோதரி ஸோ பெர்னார்டு இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அவரது வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இறப்புச் சான்றிதழுக்கும் அவர் விண்ணப்பம் செய்து பக்கவகை பிளான் போட்டு வைத்திருந்தார்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, இரண்டு பெயர் மாற்றங்களுக்கு பிறகு தற்போது தன்னை கெய்சா பெர்னார்டு என்ற பெயரில் அவர் அறிமுகம் செய்திருந்தார்.
இப்படி தொடர்ச்சியாக பெயர் குழப்பம் ஏற்பட்டதால் இந்த வழக்கு இதனாலேயே தாமதமாகியது.
இந்த வழக்கின் பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரி கூறுகையில், “பெர்னார்டுக்கு நங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தோம்.
அப்போது 2020ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரையில், பல சந்தர்பங்களில் என்னை தொடர்பு கொண்டு பேசிய பெண், தன்னை சானிஸ் பெர்னார்டு என அறிமுகம் செய்து கொண்டார்.
தன்னுடைய சகோதரி ஸோ பெர்னார்டு இறந்து விட்டதாகக் கூறினார்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக ஸோ பெர்னார்டு என்ற ஒரே பெண் தான், பல ரூபங்களில் பல பெயர் மாற்றங்களோட விளையாடி வருகிறார் என்பதை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் காவல் துறையினர் பெர்னார்டுவை ஆஜர் படுத்தினர்.
அப்போது, அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “காவல் அதிகாரி ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் ஸோ பெர்னார்டு.
மேலும், அவருக்கு சிக்கில் செல் என்னும் நோய் உள்ளது. எனவே, அவருக்கான தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்றும் தற்கொலை எண்ணத்தில் இருந்ததால் தான் அவர் சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு கொஞ்சம் கூட அவர் மதிப்பளிக்கவில்லை எனக் கூறி அணைத்து தரப்பு சமர்ப்புகளையும் தாண்டி பெர்னார்டுவை குற்றவாளி என தீர்ப்பளித்தது.