Sunday, April 20, 2025

‘எங்களுக்குனே’ வருவீங்களா? ‘கலவர’ பூமியான Delhi Capitals

நடப்பு IPL தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி, அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியை மார்ச் 24ம் தேதி, விசாகப்பட்டினம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளுமே புதிய கேப்டன்களின் தலைமையில் களம் காணுகின்றன.

கூடுதல் சுவாரஸ்யமாக எக்ஸ் அணியான டெல்லி கேபிடல்சை எதிர்த்து, ரிஷப் விளையாட இருக்கிறார். இந்தநிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்சருக்கு, அடுத்தடுத்து சோதனைகள் வரிசை கட்டி வருகின்றன.

6 கோடிக்கும் அதிகமாக கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட, இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் நடப்பு தொடரில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் BCCI தரப்பில் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் கடுப்பான ஹாரி, ”வீரர்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள்” என்று, BCCIயை எதிர்த்து பேசியிருக்கிறார்.

இதனால் IPL தடை முடிவுக்கு வந்தாலும், இனி ஏலத்தில் அவரை BCCI சேர்க்காது என்று தெரிகிறது. மறுபுறம் மனைவி அதியா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது.

அடுத்தடுத்து விழுந்த இந்த இரட்டை அடிகளால், கேப்டன் அக்சர் ரொம்பவே ஆடிப்போய் இருக்கிறாராம். இந்த பின்னடைவுகளைத் தாண்டி எப்படி அவர் அணியை, ஒருங்கிணைத்து விளையாடப் போகிறார்? என்பதில் தான் டெல்லியின் கோப்பை கனவு அடங்கியிருக்கிறது.

Latest news