இந்தியா – சீனா இடையே உறவு வலுப்பெற்று வர துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க போவதாக செய்திகள் பரவியது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
டிக் டாக்’ எனப்படும், சீன நிறுவனத்தின் மொபைல்போன் செயலி கடந்த 2020ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. தற்போது இந்தியா – சீனா இடையேயான உறவு வலுப்பெற தொடங்கி உள்ளதால் மீண்டும் டிக்டாக் செயலியை மத்திய அரசு அனுமதிக்கப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவத்தொடங்கின.
இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிக் டாக் தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என கூறியுள்ளது.