தீபாவளிக்கு முன்பே மகளிர் உரிமைத்தொகை வரவு? தமிழக அரசு முக்கிய திட்டம்!

கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனடைந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதாகவும், 60 வயது வரையிலான பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இதனால், ஜூன் மாதம் முதல் உயர்த்தப்பட்ட தொகை கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை மாதந்தோறும் ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பெண்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகையை வழக்கமான 15ஆம் தேதிக்கு முன்பாகவே வழங்க வேண்டும் எனப் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தச் சூழலில், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகையை வழங்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், முன்கூட்டியே பணம் வழங்குவது குறித்து எவ்வித தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News