மே தினத்தை முன்னிட்டு, திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர் மாலை அணிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது : ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மே தின வாழ்த்துக்கள் என கூறினார்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவித்துள்ளோம். கோடை வெயிலின் தன்மை அடிப்படையில் முதல்வர் அறிவிப்பின்படி பள்ளி திறக்கப்படும் என கூறினார்.